காத்தான் குடியில் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று( 29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மட்டக்களப்பு, ஜெயந்திபுரம், சேர்ந்த 28 வயதுடைய இளைஞர். இவர் முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவனும் பட்டதாரியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
