மகாவலி கங்கை மற்றும் மா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், கண்டி – மீவதுர, மாவனெல்ல மற்றும் அசுபினிஎல்ல ஆகிய 3 முக்கிய குடிநீர் சுத்திகரிப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
