2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதையோ அல்லது தடுத்து வைக்கப்படுவதையோ தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணைகளை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (03) நிறைவு செய்துள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பான கட்டளை செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன், வழக்குடன் தொடர்புடைய எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதியரசர்கள் குழாம் இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டுள்ளது.
