Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைக்கைதிகளின் பிரச்சினைகளைக் கண்டறிய கூட்டுப் பொறிமுறை

ஆவணி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சிறைச்சாலைகளில் உள்ள நிலைமை தொடர்பிலும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07)வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நாட்டின் 33 சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளின் பாதுகாப்புத் தொடர்பாக மேலதிகமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், கைதிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும், அவசர நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம் குறித்தும் ஆராய்வதற்காக கூட்டுப் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, 33 சிறைச்சாலைகளுக்கும் உரிய வகையில், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களில் முப்படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய கூட்டுப் பொறிமுறையொன்று எதிர்வரும் வாரத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், அவர்கள் சிறைக்கைதிகளுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோருடன், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து மறுவடிவமைப்பு குழுவின் முக்கிய சந்திப்பு!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

ஆவணி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

380,000 ரூபா பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 2 கான்ஸ்டபிள்கள் கைது!

வைகாசி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube