கம்பஹா – மினுவாங்கொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட அம்பகஹவத்த சந்திக்கு அருகில், 11 கிலோ 844 கிராம் கஞ்சா மற்றும் 5 இலட்சம் ரூபாய் பணத்துடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த முற்றுகை நடவடிக்கையின்போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனவும், அவர் கெஹெல்பத்தர பத்மே என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய மல்க என்பவரின் ஆதரவாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
