Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவேகப் பாதை வாகன ஆசனப்பட்டி சலுகைக் காலம் நீடிப்பு!

ஆவணி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அதிவேகப் பாதைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டிகளை பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலத்தை அரசாங்கம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.

தொழில்துறை பங்காளர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2011 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மோட்டார் வாகனங்கள் (அதிவேகப் பாதைகள்) கட்டளையின் படி, அதிவேகப் பாதைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆசனப்பட்டிகள் இல்லாத வாகனங்களில் அவற்றை பொருத்துவதற்கான ஆரம்ப சலுகைக் காலம் கடந்த ஜூன் 19 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், புதிய திருத்தத்தின் மூலம் குறித்த காலம் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான திருத்தம் 2026 ஜூன் 17 ஆம் திகதியிட்ட 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் மத உரிமைகள் முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் மீறப்பட்டுள்ளது

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘வாசனா’ யானையை நாட்டின் பிரதான ஊர்வலங்களில் பங்கேற்கச் செய்ய தீர்மானம்

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு – புதிய மின்சார புகையிரத கட்டமைப்பு திட்டம்!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூலை மாதத்தின் முதல் 5 நாட்களில் 5,673 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube