Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி – மலையக தமிழ் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு

ஆவணி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று (05) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட மலையக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்தின் அபிவிருத்தி, இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மலையக மக்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

2025ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள், இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரின் விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக பகுதிகளுக்கான இந்திய உதவித் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மலையக மக்களின் காணி உரிமை மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.

மேலும், வட்டவளை, அக்கரகப்பத்தனை, நாவலப்பிட்டி உள்ளிட்ட மலையகப் பகுதிகளில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் பலி!

ஆனி 9, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கொளத்தூர் சட்டமன்றத் தேர்தல் – மு.க.ஸ்டாலினின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலக்கரி இறக்குமதி மோசடி குறித்த விசாரணைகள் ஜூலை 6 ஆரம்பம்!

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube