பொரளை மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து, சிறைச்சாலை வளாகத்திற்குள் பார்வையாளர்கள் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 கைதிகள் தொடர்புபட்ட அமைதியின்மை சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற நிலையில், நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையின் வெளிப்புற பாதுகாப்புக்காக காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
