Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதம நீதியரசர், காவல்துறை மா அதிபரின் உத்தியோகபூர்வ இல்லங்களைச் சுற்றியுள்ள வீதிகளை காணொளியாக பதிவுசெய்தவர் கைது

ஆவணி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிரதம நீதியரசர் மற்றும் காவல்துறை மா அதிபரின் உத்தியோகபூர்வ இல்லங்களைச் சுற்றியுள்ள வீதிகளை காணொளியாக பதிவு செய்ததாகக் கூறப்படும் 40 வயதான சந்தேகநபர் ஒருவர் கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கையடக்க தொலைபேசியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சொகுசு வாகனமொன்றில் சென்ற சந்தேகநபர், காவல்துறை மாஅதிபரின் உத்தியோகபூர்வ இல்ல நுழைவாயிலுக்கு அருகில் காணொளி பதிவு செய்து கொண்டிருந்ததை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து, அவர் அப்பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கியதையடுத்து, கொழும்பு அவசரப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்ற கறுவாத்தோட்டம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரின் கைப்பேசியை ஆரம்பகட்டமாக பரிசோதித்தபோது, காவல்துறை மாஅதிபரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகள், அதேபோல் பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் தொடர்பான காணொளிகள் பதிவாகியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப விசாரணையின்போது, காணொளிகளை பொழுதுபோக்காக பதிவு செய்ததாக சந்தேகநபர் தெரிவித்திருந்தாலும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் தனது வசிப்பிடம் உள்ளிட்ட சில விடயங்களில் முரண்பாடான தகவல்களை வழங்கியதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அலுபொமுல்லை, அறுகொட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

தவறான மருந்தால் பார்வை இழந்தவர்களுக்கு இழப்பீடு!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தோணி கவிழ்ந்து மூன்று மாணவர்கள் பலி!

ஆனி 30, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினையை முதல்வர் பேசுவதில்லை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

புரட்டாதி 8, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

பதவியை விடுகிறார் ஷம்மி சில்வா?

சித்திரை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube