கண்டி, பல்லேகலை பகுதியில் அமைந்துள்ள தும்பர போகம்பர சிறைச்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (07) காலை முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, பொலிஸார், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, சிறைச்சாலைக்குச் செல்லும் பிரதான மற்றும் உப வீதிகளில் விசேட பொலிஸ் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.
