யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 47 ஆம் நாள் பணிகள் நேற்றைய தினம் (08) சனிக்கிழமை (8) நடைபெற்றது.

நேற்றைய அகழ்வுப்பணியின் போது 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் அடையாளம் காணப்பட்டதில் 5 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழியில் இதுவரையில் 101 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 515 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 506 என்பு கூடுகள் முற்றாக அகழப்பட்டுள்ளது.
