“நாட்டாமை குடும்பம்”என்று பச்சை குத்திக் கொண்டால், அதைத் தன்னை நேரடியாகச் சந்திப்பதற்கான ‘கிரீன் கார்ட்’ ஆகப் பயன்படுத்தலாம் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆதரவாளர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது யாருக்கும் கட்டாயமில்லை என்றும், தனக்கும் இந்தப் பச்சையைக் குத்திக் கொள்ளும் விருப்பம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான நிழற்படங்கள் வெளியாகி இணையவாசிகளிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
