ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக நஹித் ராணா விளையாடாதது வங்கதேச அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளதாக வேகப்பந்து வீச்சாளர் டாஸ்கின் அஹ்மட் தெரிவித்துள்ளார்.
பக்கவாட்டு தசை காயம் காரணமாக நஹித் ராணா தொடரில் இருந்து விலகியுள்ளதுடன், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஷொரிபுல் இஸ்லாமும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், அணியில் இடம்பெற்றுள்ள மற்ற பந்துவீச்சாளர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்த இது சிறந்த வாய்ப்பாகும் என டாஸ்கின் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய ஒருநாள் தொடரில் பெற்ற வெற்றி தங்களுக்கு நம்பிக்கையை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
