உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குள் பிரவேசிப்பதற்கும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதைகளைப் பயன்படுத்துவதற்கும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டங்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
