நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் தகவலின்படி, குறித்த கலந்துரையாடல் நாளை (12) பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
நீதித்துறையின் முக்கிய பதவிகளுக்கான ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
