Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி!

ஆனி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில், களத்தடுப்பை தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 62 பந்துகளில் 72 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 66 ஓட்டங்களையும் பெற்று சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

304 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 49.2 ஓவர்களில் 262 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் ஷாய் ஹோப் 56 ஓட்டங்களையும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர 10 ஓவர்கள் பந்துவீசி 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி பெரஹரா ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில்!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டமும், போக்குவரத்து சேவையும் பொலிசாரால் ஏற்பாடு!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல விபத்தினால் ரயில் மார்க்கக் கட்டமைப்பிற்கு 17 இலட்சம் ரூபா சேதம்

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறை கைதியுடன் 53 தடவைகள் தொலைபேசி உரையாடல் – சிக்கினார் முஜிபுர் ரஹ்மான்!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube