Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

ஆசனப்பட்டி அணிய மறுத்த சிறுவன்: கனடாவில் விமானப் பயணம் ரத்து!

ஆவணி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கனடாவில் சிறுவன் ஒருவர் விமானத்தில் ஆசனப்பட்டி அணிய மறுத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களால் முழு விமானப் பயணமும் ரத்து செய்யப்பட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6ஆம் திகதி விக்டோரியாவிலிருந்து டொரண்டோ நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த போர்ட்டர் எயார்லைன்ஸ் விமானத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானம் புறப்படத் தயாரான நிலையில், சிறுவன் ஒருவர் தனது ஆசனத்தில் நிற்பதுடன், ஆசனப்பட்டியை அணியவும் மறுத்துள்ளார். அவரை ஆசனப்பட்டி அணிய வைப்பதற்கு பெற்றோர் மற்றும் விமான ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பாதுகாப்பு விதிமுறைகளின்படி இவ்வாறான நிலையில் விமானத்தை இயக்க முடியாத காரணத்தால், விமானத்தை மீண்டும் முனையத்துக்கு கொண்டு சென்று சிறுவனையும் அவரது பெற்றோரையும் விமானத்திலிருந்து இறக்க ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், ஏற்பட்ட தாமதம் காரணமாக நள்ளிரவுக்குப் பின்னர் ஓடுபாதை மூடப்பட்டதால், விமானத்தை அன்றைய தினம் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏனைய பயணிகள் மறுநாளுக்கான வேறு விமானங்களில் மாற்றிப் பதிவு செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் விமானப் பயணங்களின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

சிறுவனின் நடத்தைக்காக முழு விமானப் பயணத்தையும் ரத்து செய்திருக்க வேண்டுமா அல்லது அந்தக் குடும்பத்தை மட்டும் விமானத்திலிருந்து வெளியேற்றியிருக்க வேண்டுமா என்பது குறித்தும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

iPhone 18 pro series செப்டம்பர் 9 அறிமுகம்

புரட்டாதி 2, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இயற்கை அனர்த்தங்களின் போது அவசர உதவிகளை வழங்கும் கரப்பான் பூச்சிகள்

ஆவணி 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

20 நிமிடங்களில் 7 இடங்களில் தாக்குதல்

ஆவணி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வீழ்ச்சியடைந்த மசகு எண்ணெய் விலை!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube