பெந்தோட்டை கடற்பரப்பில் இடம்பெற்ற பராமோட்டர் (Paramotor) விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (29) மாலை பெந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு பராமோட்டர் பயணத்தின் போது இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பராமோட்டர் கடலில் விழுந்ததில் பயணியாக இருந்த பாலஸ்தீனப் பெண் உயிரிழந்துள்ளார். பராமோட்டரை இயக்கிய கொலம்பிய நாட்டவர் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
