Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல் நினோ நிலை கடுமையான எல் நினோவாக மாற 81% வாய்ப்பு

ஆவணி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையில் தற்போது சாதாரண நிலையிலிருந்து நடுத்தர நிலைகக்கு உயர்வடைந்துள்ள எல் நினோ நிலைமை மேலும் தீவிரமடைந்து கடுமையான எல் நினோ நிலையாக மாறுவதற்கு 81 சதவீதம் சாத்திகூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

களனிப் பல்கலைகழகத்தில் இன்று (12) நடைபெற்ற எல் நினோ, லா நினோ குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வழக்கமாக மார்ச் மாதத்தில் ஆரம்பமாக வேண்டிய எல் நினோ நிலைமை இம்முறை ஜூன் மாதத்திலேயே ஆரம்பமானது. இதன் காரணமாக தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காற்றில் பாரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் நாட்டின் பல பகுதிகளில் வழக்கமான அளவை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கு இது காரணமாக அமைகிறது.

மேலும், வரவிருக்கும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கமான சராசரி மழைவீழ்ச்சியை விட அதிகமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதுடன், இந்தியப் பெருங்கடல் இருமுனை நேர்மறையாக மாறுவதால், இந்த மழைவீழ்ச்சி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய கணிப்புகளின்படி, இந்த எல் நினோ நிலைமை சுமார் 8 முதல் 12 மாதங்கள் வரை நீடித்து, அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரக்கூடும்.

இருப்பினும், இந்த எல் நினோ நிலைமை மேலும் தீவிரமடைந்து கடுமையான நிலையை அடைந்தால், அடுத்த ஆண்டில் மழைவீழ்ச்சியின் அளவு கணிசமாகக் குறையக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானுடன் பேச்சுவார்த்தை இல்லை — அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி திட்டவட்டம்!

ஆவணி 25, 2026
இலங்கை

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அமுலாக்க நடவடிக்கை முன்னெடுப்பு: தென்கொரிய மாநாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்பம்!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

23 வயதுடைய இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube