மட்டக்களப்பு -வாகரை பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதி தனியார் பேருந்து ஒன்று நேற்று (12) புதன்கிழமை மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளானது.
பேருந்தில் பயணித்த சிலர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய பஸ் சாரதி தப்பித்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

