இலங்கையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறை சுயாதீனத்தையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வெய்த் கவலை தெரிவித்துள்ளார்.
முன்மொழிவின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65இல் இருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 63இல் இருந்து 65 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த மாற்றம் தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளுக்கும் பொருந்துவது குறித்து அவர் விசேட கவலை வெளியிட்டுள்ளார்.
ஓய்வு வயதை மாற்றுவது வெளிப்படையானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான ஆலோசனை மற்றும் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் நீதித்துறை சுயாதீனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
