Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

விபத்தில் பாட்டியும் பேரனும் உயிரிழப்பு

ஆவணி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வெயங்கொடை, மகலேகொட – நைவல வீதியில் வேன் ஒன்று மின்கம்பத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் வேனின் சாரதியாக செயற்பட்ட வெயங்கொடை, ஹீந்தெனிய பகுதியைச் சேர்ந்த நவோத் சதுரங்க என்ற 21 வயதுடைய இளைஞரும், அவரது 80 வயதுடைய பாட்டியுமாவர்.

மூத்த சகோதரியின் திருமண விழா முடிந்து வெயங்கொடை, ஹீந்தெனிய பகுதியில் அமைந்துள்ள தங்களது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

மணப்பெண்ணின் சகோதரர் வேனை ஓட்டிச் சென்றுள்ளதுடன், அதில் தாய், தந்தை மற்றும் பாட்டி உள்ளிட்ட 9 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர் வேனில் பயணித்த அனைவரும் காயமடைந்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சாரதியாகச் செயற்பட்ட சகோதரரும், பாட்டியும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், காயமடைந்த 7 பேர் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வெயங்கொடை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

“திரைக்கதை மன்னன்” கே.பாக்யராஜ்

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் ரயில் சேவை மாதம்பே வரை

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இடிந்து விழும் நிலையில் காணப்படும் தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலய கட்டிடம்

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வெளியேற்றிய 4 தனியார் வங்கிகளின் உரிமையாளர்களுக்கு விளக்கமறியல்

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube