இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கு அப்பால் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 3.28 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிச்டர் அளவுகோலில் 7.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாகப் பூகம்பவியல் மையங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளுக்கு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக் கடலோரப் பகுதிகளுக்கோ அல்லது நாட்டிற்கோ எந்தவித சுனாமி அச்சுறுத்தலும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் இடர் மேலாண்மை மையம் என்பன அறிவித்துள்ளன.
அத்துடன் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் , நிலவரம் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


