Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெகசின் சிறைச்சாலை கலவரம் – குரல் பதிவு உள்ளிட்ட ஆதாரங்களுடன் சிக்கிய நபர்

ஆவணி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மெகசின் சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்வதற்கான திட்டங்கள் மற்றும் பல முக்கிய தகவல்கள் அடங்கிய குரல் பதிவுகளுடனான கைப்பேசியுடன், ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பொரளை – வனாத்தமுல்ல பகுதியில் சஹஸ்புர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் மதிலுக்கு மேல் சட்டவிரோத பொருட்களைச் சிறைச்சாலைக்குள் எறிந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘போல சுரேஷ்’ என்பவரது வீட்டைச் சோதனையிட்டபோதே, அங்கிருந்த சந்தேக நபரை சஹஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 7 கிராமும் 190 மில்லிகிராமும் கொண்ட ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இந்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடந்த 2025 ஜூலை 7ஆம் திகதி கல்கிஸ்ஸ – வட்டரப்பல வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று இருவரைக் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தில், இவர் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், 6ஆம் திகதி மெகசின் சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னரே இந்த சந்தேக நபர் பிணையில் விடுதலையாகியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

துருக்கி தூதருக்கும் திலித் ஜயவீரவுக்கும் இடையே சந்திப்பு

ஆடி 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

குடும்பத் தகராறில் பெண் பலி!

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருநகர் கடற்பரப்பில் காணாமல் போன ஒருவர் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடலமாக மீட்பு!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யூரியா உர விநியோகத்தை முன்னெடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி!

வைகாசி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube