Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

இலங்கை மண்ணில் இந்திய வீரர் தேவ்தட் படிக்கல் முதலாவது சதத்தை பதிவு செய்தார்

ஆவணி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் தேவ்தட் படிக்கல் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதன்படி, இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (15) ஆரம்பமானது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதற்கமைய, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

உணவு இடைவேளைக்கு பின்னர் காலநிலை மாற்றத்தினால் போட்டி தாமததாகவே ஆரம்பிக்கப்பட்டதால், முதல் நாளில் 73 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டன.

இதனிடையே, காயம் காரணமாக கே.எல். ராகுல் ‘ரிட்டையர்ட் ஹேர்ட்’ முறையில் வெளியேறினார்.

இதன்போது ராகுல் மற்றும் படிக்கல் ஜோடி 150 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்தது.

தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தேவ்தட் படிக்கல், தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முதலாவது சதத்தை பதிவு செய்து 131 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச்சூடு

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள “நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்திற்கு சிறீதரன் முழுமையான ஆதரவு!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு: ஐ.நா. எச்சரிக்கை

ஆவணி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வெற்றி தினம் இன்று!

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube