Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓமந்தையில் புத்தர் சிலையை நிறுவி காணியை ஆக்கிரமிக்க முயற்சி – கஜேந்திரகுமார் எம்பி

ஆவணி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கும் காணியை அபகரிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் அவசர முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

​அரசங்குளத்தில் பொலிஸ் நிலையத்திற்கு 5 ஏக்கர் காணியும் கட்டிடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தும் பொலிஸார் அங்கு செல்ல மறுத்து வருகின்றனர். தற்போது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில் இயங்கும் பொலிஸ் நிலையம், அதன் அருகிலுள்ள காணியையும் ஆக்கிரமித்தால் ஓமந்தையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

​பொதுமக்களின் அழைப்பை ஏற்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி, சட்டத்தரணி ந. காண்டீபன் அவர்களும், வவுனியா வடக்கு உபதவிசாளர் வி. சஞ்சுதன், பிரதேச சபை உறுப்பினர் க. பிரதீபன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் விஎஸ் தவபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

​சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு மற்றும் புத்தர் சிலை அமைக்கும் முயற்சிக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படும் என பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களின் விலையில் மாற்றமில்லை

புரட்டாதி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: சுமந்திரன் வாதம்! விசாரணை செப்டம்பர் 7ஆம் திகதி

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொசன் பயணிகளுக்கான விசேட போக்குவரத்து இன்று தொடர்கிறது!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும்!

புரட்டாதி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube