Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

ஒரே ஸூம் அழைப்பில் 900 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அதிகாரியின் வேலை பறிபோனது

ஆவணி 16, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

2021-ஆம் ஆண்டு ஸூம் அழைப்பின் மூலம் சுமார் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அவப்பெயரைச் சந்தித்த இந்திய வம்சாளி சி.இ.ஓ. ஒருவர் தற்போது தனது வேலையை இழந்துள்ளார்.

பெட்டர் ஹோம் & ஃபைனான்ஸ் நிறுவனம் (Better Home & Finance Holding Company) (Better.com) என்பது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு முன்னணி நிதித் தொழில்நுட்பக் (FinTech) நிறுவனமாகும். இந்த நிறுவனம் டிஜிட்டல் முறையில் அடமானக் கடன், வீட்டுக் கடன் மற்றும் காப்பீட்டுச் சேவைகளை வழங்குகிறது.

சாஃப்ட்பேங்க் (SoftBank) போன்ற சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகளுடன், சுமார் 110 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான கடன்களை வழங்கிப் பிரபலம் அடைந்த இந்த நிறுவனம், 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒரு ஸூம் அழைப்பின் மூலம் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த சம்பவத்திற்குப் பிறகு, நற்பெயரையும் நிதிநெருக்கடியையும் சந்திக்க ஆரம்பித்தது.

இதனை அடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) விஷால் கார்க் (Vishal Garg),ஒரே ஸூம் (Zoom) வீடியோ அழைப்பில் 900-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட 3 நிமிட ஸூம் வீடியோ அழைப்பில், இந்த அதிரடி பணிநீக்கத்தை அறிவித்தார். இதனால், நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் சுமார் 9% முதல் 15% வரையிலான ஊழியர்கள் (சுமார் 900 பேர்) வேலையை இழந்தனர்.

இந்தச் சம்பவத்திற்கு முன்பே, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அவர்களை ’மந்தமான டொல்ஃபின்கள்’ (Dumb Dolphins) எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இது, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, தாம் நடந்துகொண்ட விதத்திற்காக மன்னிப்பு கோரிவிட்டு தற்காலிகமாக விடுப்பில் சென்றார். தவிர, அதே ஆண்டில் அந்த நிறுவனத்தின் விற்பனை, 2021-இல் சுமார் 1.5 பில்லியன் டொலரிலிருந்து 2023-இல் வெறும் 70 மில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்தது. அதன் பிறகு நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 300 மில்லியன் டொலராகக் குறைந்தது.

இந்த சம்பவத்தால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நற்பெயர் இழப்பு மற்றும் பெரும் நிதிச் சரிவு காரணமாக, அந்த நிறுவனம் தற்போது விஷால் கார்க்கை CEO பதவியில் இருந்து முழுமையாக நீக்கியுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு

ஆவணி 27, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தலவாக்கலை – பூண்டுலோயா வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்து தடை!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை 9,469 டெங்கு நோயாளர்கள்

ஆவணி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூ.120 மில்லியன் லஞ்ச வழக்கு: சரித் அபேசிங்க பதவி பறிப்பு!

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube