Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்பலகாமம் – பரவிபாஞ்சான் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கள்ளச்சாராய உற்பத்தி பகுதி பொலிஸாரால் முற்றுகை!

Batticaloa | Thambalagamam | Illegal Liquor | Police | SrilLanka | Quick Tamil News

வைகாசி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு அண்மித்த காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கள்ளச்சாராய (வடிசாராயம்) உற்பத்தி நிலையம் ஒன்றை கந்தளாய் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சனிக்கிழமை (02) முற்றுகையிட்டுள்ளனர்.

கந்தளாய் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கந்தளாய் தலைமையக பொலிஸ் அதிகாரி லக்மல் விஜயவர்த்தன தலைமையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று பீப்பாய்களில் இருந்த சுமார் 540,000 மில்லி லீற்றர் கோடா (Godu) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

மேலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, பரவிபாஞ்சான் குளத்தின் நீரில் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 47 மரக் குற்றிகள் மற்றும் மரக்கம்புகளும் கைப்பற்றப்பட்டன.

சம்பவ இடத்தில் இருந்த சந்தேகநபர்கள் பொலிஸாரைக் கண்டதும் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தப்பிச்சென்ற இரு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 5 இலட்சம் ரூபாய் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று வழமைபோல ரயில் சேவைகள் இடம்பெறும்!

ஆனி 10, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கரூர் நெரிசல் உயிரிழப்பு: அரசுப் பணி ரத்து தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேன்முறையீடு!

ஆடி 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தென் ஆபிரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube