Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயது – எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் செல்ல முடிவு

ஆவணி 16, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

நீதியரசர்கள் ஓய்வு பெறும் வயதை மேலும் இரண்டு வருடங்கள் நீட்டிக்கும் அரசின் முயற்சியை எதிர்த்துப் போராடப் பல்வேறு எதிர்க்கட்சிகள் தற்போது முடிவு செய்துள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் கூட்டு எதிர்க்கட்சிகள் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான இந்த 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை நாளை மறுநாள் (18) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, இது தொடர்பான விவாதத்துக்கான திகதியை நிர்ணயித்தல் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து அரச தரப்பு தீர்மானிக்கும். இவ்வாறானதொரு சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக உயர் நீதிமன்றம் செல்லத் தீர்மானித்துள்ளதுடன், சிவில் அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கங்களும் 22 ஆவது திருத்தத்தைச் சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளன.

வெளியிடப்பட்டுள்ள புதிய சட்ட மூலத்தின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை 65 ஆகவும் திருத்தப்பட்டுள்ளது. எனினும், பிரதம நீதியரசர் ஓய்வு பெற வேண்டிய திகதியானது, அவருக்கு 67 வயதாகும் திகதி அல்லது அவர் பிரதம நீதியரசராகப் பதவியேற்ற நாளில் இருந்து 6 ஆண்டுகள் நிறைவடையும் திகதி ஆகிய இரண்டில் எது முதலில் வருகிறதோ அந்தத் திகதியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நகர்வு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் அமைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக இத்தகைய மாற்றங்களை மேற்கொள்ளவே முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் உயர் நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளதால், கூட்டு எதிர்க்கட்சி சார்பில் தான் உயர் நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளை நினைவூட்டிய அவர், ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது நலம் சார்ந்த பிணைப்போ உள்ள எந்தவொரு அரச அதிகாரியும் அது தொடர்பான முடிவுகளிலோ அல்லது வாக்களிப்பிலோ பங்கேற்க முடியாது என்றும், மீறினால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 162 ஆவது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அரச அதிகாரிகள் என்ற வரையறைக்குள்ளேயே அடங்குவதால், தங்களின் சொந்த ஓய்வுபெறும் வயது தொடர்பான இந்த விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் சட்டரீதியான அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு கிடையாது எனவும் பீரிஸ் விளக்கமளித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரபல பாடசாலையில் மாணவி வன்புனர்வு; சம்பவத்தை மூடி மறைத்த அதிபர், உப அதிபர்

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்குக் காத்திருக்கும் பேராபத்து!

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையை வந்தடைந்தது ‘மெயின் ஷிப் 6’ அதிநவீன சொகுசுக் கப்பல் !

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச்சென்ற மாணவன் மாயம்

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube