Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 30

ஆவணி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 30-ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரும், வவுனியா மாவட்டத் தலைவியுமான சிவானந்தன் ஜெனிற்றா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நாம் நீதிக்காக தொடர்ந்து போராடி வருகின்றோம். உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையிழந்து சர்வதேச நீதியை வலியுறுத்தித் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்திலும் வடக்கு – கிழக்கு பகுதிகளில் நாம் பெரியளவிலான போராட்டங்களை நடத்தி வந்திருந்தோம். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பல அறிக்கைகளையும், வெளியிட்டு உள்ளோம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நீதி கிடைக்கவில்லை. நியாயமான நீதி கிடைக்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட தாய்-தந்தையர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள், நலன்புரிச் சங்கத்தினர் பங்கேற்று முழு ஆதரவை அளித்துள்ளனர்.

அது போல், மதகுருமார்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதனைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று ஆகஸ்ட் 30 அன்று திரளாகப் பங்கேற்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்..

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழப்பு!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சி – அக்கராயன்குளம், கண்ணகிபுரம் பகுதியில் பரபரப்பு!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊஞ்சல் தடி முறிந்து விழுந்தில் தாயுடனிருந்த 5 மாதக் குழந்தை பலி!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube