Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

செப்.4-ல் திரையரங்குகளில் வெளியாகும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’

ஆகஸ்ட் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

டி. ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படம் எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், காதல் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

தாயை இழந்து சிறு வயதிலிருந்தே தனிமையில் வளரும் இளைஞன் ஒருவர், மதுவுக்கு அடிமையாகி இருளான வாழ்க்கையில் சிக்கித் தவிக்கிறார். அவரது வாழ்க்கையில் காதல் நுழைந்த பின்னர் ஏற்படும் மாற்றங்களே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

பழைய காதல் கதைகளின் அழகை தக்கவைத்துக்கொண்டு, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களைக் கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படத்தின் டீசரில், தனிமை, வலி மற்றும் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞனின் வாழ்க்கையில் காதல் ஏற்படுத்தும் மாற்றங்கள் உணர்வுபூர்வமான காட்சிகளுடன் இடம்பெற்றிருந்தன.

மேலும், இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக முழுப் படமும் லைவ் சவுண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. பாடல்களும் நேரடி இசைக்கருவிகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளன.

Anthony’s Atelier நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் டி. ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம்ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ் மற்றும் ரியா மனோஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். ஜோயி ரிடா பின்னணி இசையை அமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி பாடல்களை எழுதியுள்ளனர்.

படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

காதல் ஒரு மனிதனின் வாழ்க்கையை எந்தளவுக்கு மாற்றும்? என்ற கேள்வியை மையமாகக் கொண்டுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படம், செப்டெம்பர் 4ஆம் திகதி ரசிகர்களை சந்திக்கவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டில் இந்தியாவுக்கு ஒரே போட்டியில் மூன்று பதக்கங்கள்

அக்டோபர் 22, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

முதலமைச்சரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கண்டனம்

செப்டம்பர் 7, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு; சாரதியிடம் வாக்குமூலம் பதிவு!

அக்டோபர் 19, 2026
இந்தியாசினிமா

தனது பெயர் மற்றும் உருவத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய நடிகை தபு!

ஆகஸ்ட் 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube