Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தொகை கோடா மற்றும் கசிப்புடன் மூவர் கைது

ஆவணி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கட்டுநாயக்க, ஹிரண மற்றும் ஹோமாகம பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருந்தொகையான கோடா மற்றும் கசிப்புடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க – கணுவத்த பகுதியில் கட்டுநாயக்க பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 3,780 லீற்றர் (21 பேரல்கள்) கோடா கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.

அதேவேளை ஹிரண – அருக்கொட பகுதியில் ஹிரண பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்ட முற்றுகையின் போது, 67 லீற்றரும் 500 மில்லி லீற்றரும் கொண்ட 90 போத்தல் சட்டவிரோதக் கசிப்பு மற்றும் 1,110 லீற்றர் (8 பேரல்கள்) கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய அருக்கொட பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஹோமாகம – பிட்டிபன பகுதியில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 2,340 லீற்றர் (13 பேரல்கள்) கோடாவுடன் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு மீதான பரிசீலனை நிறைவு: உத்தரவு செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி செயலாளருக்கும் Buddhist Tzu Chi Merit அமைப்பிற்கு இடையே கலந்துரையாடல்

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: சுமந்திரன் வாதம்! விசாரணை செப்டம்பர் 7ஆம் திகதி

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தவருக்கு 750000 அபராதம்

புரட்டாதி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube