தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (20) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று ஆரம்பமாகும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே தெரிவித்தார்.
இவ்வாண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
