Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

Tiktok பார்வையாளர்களை கவர தவறான திசையில் வாகனம் செலுத்தும் இளைஞர்கள்

ஆகஸ்ட் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அயர்லாந்தில் சமூக ஊடகங்களில் அதிகப் பார்வையாளர்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் வாகனம் செலுத்தும் ஆபத்தான போக்கில் ஈடுபட்டு வருவதாக அயர்லாந்து காவல்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், டப்ளின் வானூர்தி நிலையத்துக்குப் பயணித்த மற்றுமொரு வாகனத்தின் மீது, தவறான திசையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதி இடம்பெற்ற பயங்கர விபத்தில் 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மற்றைய வாகனத்தில் பயணித்த மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து, ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான வீதிப் பயணங்களை ஊக்குவிக்கும் விதமாக வெளியிடப்படும் காணொளிகளை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு அயர்லாந்து நாடாளுமன்றக் குழு மற்றும் ஊடக ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு என்பன டிக்டொக் (TikTok) நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, விதிகளை மீறும் கணக்குகள் மற்றும் விபத்து தொடர்பான காணொளிகளைத் தீவிரமாகக் கண்காணித்து அகற்றி வருவதாக டிக்டொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இளைஞர்கள் குழுக்களாக இணைந்து காவல்துறைக்குச் சவால் விடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிகளுக்கு மாறாக வாகனம் செலுத்தியும் காணொளிகளைப் பதிவிட்டு வருவதைக் கட்டுப்படுத்த அயர்லாந்து அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

நெடுஞ்சாலையில் தவறான திசையில் வாகனம் செலுத்துவதைத் தனிக் குற்றமாக அறிவிக்கவும், காவல்துறைக்கு விசேட வாகனத் துரத்தல் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காணி விடுவித்தோம்; காணாமலாக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்தோம்”

ஜூலை 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீட்பெல்ட் அணியாததால் சுமார் 400 பேருக்கு சட்ட நடவடிக்கை!

ஜூன் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூஜித்தவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்கான திகதி நிர்ணயம்

ஜூன் 12, 2026
உலகம்தொழில்நுட்பம்

2027க்குள் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய BMW தீர்மானம்!

ஜூலை 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube