Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் – சாணக்கியன் இராசமாணிக்கம்

ஆவணி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மலையக பெண்கள் இன்றும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் தான் பெருந்தோட்டங்களில் தொழில் புரிகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இதுவரை காலமும் சாதகமான முன்மொழிவுகள் மற்றும் சட்டத்திருத்தங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை.

இனிவரும் காலங்களிலாவது அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (20) நடைபெற்ற பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் என்ற மிக முக்கியமான சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் ஊடாக தண்டப்பணம் அதிகரிக்கப்படும் என்ற திருத்தமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டமூலங்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து அவற்றை இயற்றுவது முக்கியமானதுடன், அதேபோல் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.

பெண்களுடன் தொடர்புடைய நேரடியான பிரச்சினைகள் என்று பார்த்தால் எமது மலையக பெண்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். அவர்கள் இன்றும் பாதுகாப்பற்ற நிலையில் தான் பெருந்தோட்டங்களில் தொழில் புரிகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இதுவரை காலமும் சாதகமான முன்மொழிவுகள் மற்றும் சட்டத்திருத்தங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. இனிவரும் காலங்களிலாவது அது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கும், காணி உரிமைகளுக்கும் தீர்வு காணவேண்டும். சம்பளத்தை அதிகரித்தால் மாத்திரம் அவர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடாது. டிட்வா புயல் தாக்கத்தின் பின்னரும் மலையக மக்களின் வீடு மற்றும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை. அவர்களின் வாழ்க்கை இன்றும் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. அரசாங்கத்துக்கு எதிராக அரசாங்கமே எதிர்காலத்தில் தண்டப்பணம் விதிக்கும் நிலை ஏற்படும் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகளால் தோல்வி

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடன் வழங்குநர் மின்னஞ்சல் பொருந்தவில்லை என எச்சரித்தும் மோசடியாளர்களுக்கே பணப்பரிமாற்றம் செய்த அதிகாரிகள்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

யாழ் இந்துக் கல்லூரி ஹொக்கி அணி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு!

ஆடி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube