யாழ் இந்துக் கல்லூரியின் ஹொக்கி அணி, வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
வட மாகாண மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கிப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று, தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளது.

யாழ் இந்துக் கல்லூரியில் ஹொக்கி விளையாட்டு 1980களில் இடம்பெற்றிருந்த போதிலும், பின்னர் சுமார் 40 ஆண்டுகளாக அந்த விளையாட்டு கைவிடப்பட்டிருந்தது. அதன் பின்னர், 2022 ஆம் ஆண்டு ஹொக்கி அணி மீள நிறுவப்பட்டு, திட்டமிட்ட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
