கல்கிஸ்ஸ பகுதியில் வீடொன்றின் பூட்டை உடைத்து 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த சந்தேகநபர் ஒருவரை கல்கிஸ்ஸ தலைமையகப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய்துள்ளனர்.
முறைப்பாட்டாளர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகைக்குக் குடியிருந்து வந்த கல்கிஸ்ஸ வீட்டை, கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதி பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர் ஆகஸ்ட் 19 ஆம் திகதி காலை வீடு திரும்பிய போதே இத் திருட்டுச் சம்பவம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் 19 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, கல்கிஸ்ஸ தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட உடனடி விசாரணைகளின் மூலம், முறைப்பாடு கிடைத்து 2 நாட்களுக்குள் சந்தேகநபரைக் கைது செய்ததுடன், திருடப்பட்ட பொருட்களில் பெருமளவிலானவற்றையும் மீட்டுள்ளனர்.
