Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த மூவர் கைது

ஆவணி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகே வாகனப் பதிவிற்கான ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 39, 52 மற்றும் 56 வயதுடைய நாரஹேன்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் லெட்டர்ஹெட்களைக் கொண்ட 2 வருமான உரிம விண்ணப்பப் படிவங்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் அமைதி நீதியரசர் (JP) ஒருவரின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், போலி சான்றிதழ்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டையின் நிழற்படப் பிரதி , போலித் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றின் வாகனப் பதிவுச் சான்றிதழ் பிரதி, சட்டத்தரணி ஒருவரின் விவரங்களைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களக் கடிதப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் கோப்புத் தாள்கள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மூதூர் நகரில் போதைப்பொருளுடன் 22 வயது இளைஞன் கைது!

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் எந்தவொரு பிரச்சினைக்கும் எதிர்க்கட்சியின் தீர்வு நம்பிக்கையில்லா பிரேரணை!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அடுத்த ஜனாதிபதி திலித் ஜயவீரவே – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்!

வைகாசி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube