எஹெலியகொடை – கல்பொத்தஹேன குளத்தில் குளிக்கச் சென்ற 22 வயதுடைய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் தனது நண்பர்கள் நால்வருடன் இணைந்து குளத்தில் குளிக்கச் சென்ற போதே இந்த திடீர் விபத்தில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் எஹெலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
