Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மழைக்கால நிலைமை தொடர்ந்து நீடிக்கும்!

வைகாசி 28, 2026
படிக்க 2 நிமிடங்கள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழைக்கால நிலைமை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமான, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அதேநேரம், புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீட்டர் ஆக காணப்படும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (50-60) கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

கங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பிராந்தியங்கள் அவ்வப்போது ஓரளவுக் கொந்தளிப்பாகக் காணப்படும்.

கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் அலைகளின் உயரம் சுமார் (2.0 – 2.5) மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் (இது தரைப்பகுதிக்கானது அல்ல).

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்!

ஆனி 12, 2026
இலங்கை

மே தினம் மற்றும் வெசாக் பண்டிகை நாட்களில் மதுபான சாலைகள் மூடப்படும்!

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல விபத்தினால் ரயில் மார்க்கக் கட்டமைப்பிற்கு 17 இலட்சம் ரூபா சேதம்

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்களுக்கு தடை!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube