Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பணப்பரிமாற்றம் கணிசமாக உயர்வு

ஆவணி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டின் சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கும் வருமானம் குறைவடைந்துள்ள போதிலும், வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பணப்பரிமாற்றம் கணிசமான வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மூலம் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் 1,796.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.5% குறைவடைவு ஆகும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 318.5 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட சுற்றுலா வருமானம், இந்த ஆண்டு ஜூலையில் 285.5 மில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.

இதேவேளை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு 4,435.2 மில்லியன் டொலர்களாக இருந்த வருமானம், இந்த ஆண்டு 8,382.4 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில் பெறப்பட்ட 697.3 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் டொலர்கள் வருமானமாகப் பதிவாகியுள்ளது.

சுற்றுலாத் துறை வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கெப் ரக வாகனம் மோதி யானை பலி!

வைகாசி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

விண்வெளி வீரர்களுக்கு நாசா அவசர உத்தரவு!

ஆனி 5, 2026
இலங்கைவானிலை

பல பகுதிகளில் மழை; பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு!

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube