மொனராகலை – ஹம்பேகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 7 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,044.180 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இந்தத் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட கஞ்சாத் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பேகமுவ காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
