கட்டுநாயக்க பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு முற்றுகைகளின்போது பெருமளவிலான கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) கட்டுநாயக்க பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் இச்சோதனைகள் நடத்தப்பட்டன.
தடுங்கங் ஓய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 945 லீற்றர் கோடாவுடன் (05 பீப்பாய்கள்) 56 வயதுடைய கந்தானை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கபுவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு முற்றுகையின் போது 2079 லீற்றர் கோடா (11 பீப்பாய்கள்) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
எனினும், சோதனையின்போது அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
