Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் டெஸ்லா மின்சார கார்கள் உள்ளிட்ட 3 மில்லியன் கார்களை மீளப்பெறுவதாக அறிவிப்பு

ஆவணி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அவசர காலங்களில் வாகனங்களில் இருந்து வெளியேறுவதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய உட்புறக் கதவு கைப்பிடிகள் அமைப்பு காரணமாக, சீனாவில் சுமார் 3 மில்லியன் டெஸ்லா கார்களை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டின் தேசிய சந்தை ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட Model 3, Model Y, Model X மற்றும் Model S வகைகளைச் சேர்ந்த சுமார் 2.98 மில்லியன் டெஸ்லா மின்சார வாகனங்கள் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.

எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் இந்த மீளப் பெறும் நடவடிக்கை தொடங்கவுள்ளது.

விபத்துகள் போன்ற தீவிரமான அவசரச் சூழ்நிலைகளில் வாகனத்தின் குறைந்த மின் அழுத்த அமைப்பு செயலிழந்தால், உட்புறக் கதவு கைப்பிடிகள் இருக்கையின் நிறத்துடனேயே ஒத்துப் போவதால் அவற்றைக் கண்டறிந்து இயக்கச் சிரமமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் உடனடியாக வெளியேறுவதோ அல்லது வெளியில் உள்ளவர்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்வதோ தடைபடலாம் என அந்த ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

டெஸ்லாவைத் தவிர, சியோமி, எக்ஸ்பெங், ஜியோகி, செரி, லீப்கோட்டார் மற்றும் BAIC உள்ளிட்ட மேலும் எட்டு முன்னணிச் சீன வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் இதே போன்ற பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாகத் தங்கள் கார்களை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளன.

பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், கைப்பிடிகள் அருகே எச்சரிக்கை ஸ்டிக்கர்களை இலவசமாக ஒட்டுவதுடன், விபத்துக்குப் பிறகு சாளரங்களை தானாக இறக்கும் வசதிக்காக மென்பொருள் மேம்படுத்தல்களையும் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

சமீபகாலமாக நவீன கார்களின் வடிவமைப்பு முறைகளால் விபத்து நேரங்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்துச் சீனாவில் பாதுகாப்பு அச்சங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி தற்கொலை முயற்சி

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை – வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் பதிவாகும் குற்றச் சம்பவங்களில் 40 சதவீதமானவை மேல்மாகாணத்தில் பதிவு

ஆவணி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube