கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட ‘இலங்கை கடற்படை கப்பல் புவனேக’ வின் நடவடிக்கையில், திங்கட்கிழமை (24) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின் போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து படகொன்று மற்றும் 380 கடல் அட்டைகள் ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
