Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கையடக்க   தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறை தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகாதரன் கைது!

வைகாசி 30, 2026
படிக்க 2 நிமிடங்கள்

ஏறாவூர் – நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த 11 வயது சகோதரியை, கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சிறுவனை இன்று சனிக்கிழமை (30) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை (28) ஏறாவூர் 5ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா,என்ற சிறுமி குளியலறை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், தந்தையார் சம்பவ தினத்தன்று வேலைக்காக வெளியில் சென்றுள்ள நிலையில் 14 வயது சகோதரனும் 11 வயது சகோதரியும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தருமாறும், டிக் டாக் பார்க்க வேண்டும் என சகோதரன் கேட்ட போது , சகோதரி கையடக்க தொலைபேசியை கொடுக்க மறுத்துள்ள நிலையில் இருவருக்கும்  இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் சகோதரியின் கழுத்தை நெரித்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்

இதனை தொடர்ந்து சகோதரியை இழுத்து சென்று குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாது போல வீட்டில் இருந்து பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதே நேரம் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த தந்தை வீட்டில்  பிள்ளைகளை காணவில்லை என தேடிய போது குளியலறை தண்ணீர் தொட்டியில் 11 வயது மகள் வீழ்ந்து  மயங்கி கிடப்பதை கண்டு அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 14 வயது சிறுவன் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுவன் சகோதரியை கொலை செய்துள்ளார் என  தெரியவந்துள்ளது

இதனை தொடர்ந்து குறித்த சிறுவனை கைது செய்துள்ளதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர்  மேற்கொண்டு

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் 3 கடைகளை உடைத்து பல இலட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்கள் திருட்டு!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் 5 நவீன இயந்திரங்கள்!

வைகாசி 31, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் இல்லை – ஈரான் திட்டவட்ட அறிவிப்பு

ஆனி 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube