Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து – சிசிடிவி காட்சி வெளியானது

#நுவரெலியா #பேருந்துவிபத்து #சிசிடிவிகாட்சி #விபத்துகாட்சி #விபத்து #இலங்கை #NuwaraEliya #BusAccident #CCTV #SriLanka #BreakingNews

ஆவணி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நுவரெலியா, ஹக்கல பகுதியில் கடந்த 23ஆம் திகதி காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விபத்து இடம்பெறும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் எதிர்திசையில் வந்துகொண்டிருந்த காரொன்றில் பொருத்தப்பட்டிருந்த டாஷ்போர்ட் சிசிடிவி கமராவில் இந்த விபத்து பதிவாகியுள்ளது.

கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதியதையடுத்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் பேருந்தில் சிக்கியுள்ளார்.

பேருந்து அவர் மீது கவிழ்ந்து விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் பேருந்தின் சாரதி மற்றும் பெண் ஒருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், நேற்று (24) சாரதி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதையடுத்து, அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதியை இன்று (25) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 மீற்றர் வரை உயர்ந்த கடல் படுகை!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 21 சந்தேக நபர்கள் கைது!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு செப்டம்பரிலா?

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்

ஆவணி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube