ஆந்திராவில் தாயின்றி பசியால் வாடிய பன்றிக் குட்டிக்கு பசு ஒன்று பால் கொடுத்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாயை இழந்த நிலையில் பசியால் தவித்த பன்றிக் குட்டி, பசுவின் அருகில் சென்றதாகவும், அதற்கு பசு பால் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக பசுக்கள் தங்களது கன்றுகளைத் தவிர பிற குட்டிகளை அருகில் அனுமதிக்காத நிலையில், இந்தச் சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், இணையவாசிகள் பலரும் பசுவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து, நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
