பொத்துஹெர ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக, வடக்கு ரயில் மார்க்கத்தினுடான ரயில் போக்குவரத்துக்கு தடைபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொல்கஹவேலயிலிருந்து மஹவ நோக்கிப் பயணித்த ரயில், பொத்துஹெர ரயில் நிலையத்தில் வைத்து இன்று (28) இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாகப் பாதையில் ஏற்பட்டுள்ள அடைப்பினால், பொத்துஹெர ரயில் நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்துப் ரயில் சேவைகளும் தாமதமடையும் என ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
