Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி மின்கம்பத்தில் மோதி விபத்து – மூவர் படுகாயம்

ஆவணி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சாய்ந்தமருதிலிருந்து ஏறாவூர் நோக்கி திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

சாரதியின் தூக்கக் கலக்கம் காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வீதியோரத்திலிருந்த மின் கம்பத்துடன் பலமாக மோதியுள்ளது. இக்கடூர மோதலில் முச்சக்கர வண்டி முற்றாகச் சேதமடைந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 50 வயதுடைய தாய் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 55 வயதுடைய தந்தை மற்றும் 18 வயதுடைய மகள் ஆகியோர் படுகாயங்களுடன் உடனடியாக ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மேலதிக அவசர சிகிச்சைகளுக்காக மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

பிரதான நீர்த்தேக்கங்களில் 63% நீர் சேமிப்பு – சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுரை!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு; மூவர் கைது

ஆனி 8, 2026
இலங்கை

கடந்த 10 நாட்களில் 5,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்தர பரீட்சை குறித்து இன்று முக்கிய தீர்மானம்!

ஆவணி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube